கேரட் மாங்காய் சாதம் (carrot mango rice )
தேவையான பொருட்கள்:
1. கேரட் - 100 கிராம்2. மாங்காய் - 100 கிராம்
3. அரிசி - 1 ஆழாக்கு (2 கப் )
4. நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
7. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
8. காய்ந்த மிளகாய் - 4
9. பச்சை மிளகாய் - 1
10. பெருங்கயத்தூள் - 1 சிட்டிகை
11. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
12. கறிவேப்பிலை சிறிதளவு
13. உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
அரிசியை கழுவி வேக வைத்து சாதம் உதிரி உதிரியாக இருக்கும்படி
வடித்துக்கொள்ளவேண்டும். குக்கரிலும் செய்யலாம்.
கேரட் மற்றும் மாங்காயை துருவிக்கொள்ளவும். வெங்காயத்தை
பொடியாக நறுக்கிக்கொள்ளவும் .
அடுப்பில் வாணலியை வைத்து காய்ந்ததும் நல்லெண்ணெய் இரண்டு
மேஜைக்கரண்டி விடவும். கடுகு,கடலைப்பருப்பு,, உளுத்தம்பருப்பு, போட்டு
தாளிக்கவும். கொஞ்சம் சிவந்ததும் , காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய்,
பெருங்காயத்தூள் 1 சிட்டிகை, மஞ்சள் தூள் 1 சிட்டிகை போட்டு வதக்கவும்,
பிறகு வெங்காயம், கறிவேப்பிலையை கொட்டி சிறிது நேரம் வதக்கவும்,
வெங்காயம் வதங்கியதும் கேரட், மற்றும், மாங்காயை போட்டு கிளறவும்.
இரண்டு நிமிடம் மூடி வைத்து பிறகு இறக்கவும்.
சாதத்தை ஒரு பேசினில் கொட்டி கேரட், மாங்காய் கலவையை அதில்
கொட்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
குழைதைகளுக்கு மிகவும் பிடிக்கும். புளிப்பு, காரம், இனிப்பு, உவர்ப்பு என
அனைத்து சுவையும் கலந்த சாதமாக இது இருக்கும்
கருவுற்ற பெண்களுக்கு பிடித்த உணவாக இது அமையும்.
No comments:
Post a Comment