வேப்பம்பூ பொடி
தேவையான பொருட்கள் :
1. வேப்பம்பூ - 1 ஆழாக்கு (200கிராம்)
2. தனியா - 1/4 ஆழாக்கு (50 கிராம்)
3. மிளகு - 1/2 தேக்கரண்டி ( டீஸ்பூன் )
4. மிளகாய் வற்றல் - 4 அல்லது 5
5. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வேப்பம்பூவை சிவக்க வறுக்கவும் . தனியா , மிளகு , மிளகாய்
வற்றல் , பெருங்காயம் ஆகியவற்றையும் வறுக்கவும் . பிறகு
எல்லாவற்றையும் சேர்த்து , உப்பு போட்டு , மிக்ஸ்யில் அரைத்தால்...
வேப்பம்பூ பொடி தயார்.
வற்றல் , பெருங்காயம் ஆகியவற்றையும் வறுக்கவும் . பிறகு
எல்லாவற்றையும் சேர்த்து , உப்பு போட்டு , மிக்ஸ்யில் அரைத்தால்...
வேப்பம்பூ பொடி தயார்.
சாதத்தில் பசுநெய் விட்டு , தேவையான அளவு வேப்பம்பூ பொடியை
சேர்த்து கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரம் ஒருமுறை வேப்பம்பூ பொடி
உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
உணவில் அறுசுவையும் இருக்க வேண்டும் கசப்பும் ஒரு சுவைதான்
அது உடலுக்கு அதிக நன்மையை அளிக்கவல்லது.
அது உடலுக்கு அதிக நன்மையை அளிக்கவல்லது.
No comments:
Post a Comment