கொள்ளு பொடி :
தேவையான பொருட்கள் :
1. கொள்ளு பயறு - 100 கிராம்
2. மிளகு - ஒரு தேக்கரண்டி
3. காய்ந்த மிளகாய் - 4
4. உளுத்தம்பருப்பு - 4 தேக்கரண்டி
5. பெருங்காயத்தூள் - சிறிதளவு
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கடாயில் கொள்ளு பயறை தனியாக வறுத்துக்கொள்ளவும்.
மிளகு, காய்ந்த மிளகாய் , உளுத்தம்பருப்பு ஆகியவற்றை
தனி தனியாக வறுத்துக் கொள்ளவும்.
இவை எல்லாவற்றையும் கலந்து மிக்ஸ்யில் நன்கு
பொடித்து , பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
சாதத்தில் இந்த பொடியை போட்டு சிறிது பசுநெய் விட்டு
சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
இந்த பொடி , கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இடுபெலும்பை வலுப்படுத்தவும் பயன்படுகிறது.
No comments:
Post a Comment