முளைக்கட்டிய முப்பயறு அடை
தேவையான பொருட்கள் :
1. முளைக்கட்டிய பச்சைப்பயறு - 1/2 கப்
2. முளைக்கட்டிய கொள்ளு - 1/2 கப்
3. முளைக்கட்டிய தட்டைப்பயறு - 1/2 கப்
4. பச்சரிசி மாவு - 1/2 கப்
5. மசித்த உருளைக்கிழங்கு - 1/2 கப்
6. உருவிய முருங்கைக்கீரை - 1/2 கப்
7. நறுக்கிய வெங்காயம் -1 கப்
8. பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
9. காய்ந்த மிளகாய் - 3 கிள்ளிக்கொள்ளவும்
10. சோம்பு - 2 தேக்கரண்டி (டீஸ்பூன் )
11. தேங்காய் துருவல் - 1/2 கப்
12. பெருங்காயம் - 1 சிட்டிகை
13. எண்ணை அல்லது பசுநெய் - தேவையான அளவு
14. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
மூன்று பயறுகளையும் பன்னிரெண்டு மணி நேரம் ஊற வைத்து ,
தண்ணீரை வடிகட்டி மீண்டும் பன்னிரெண்டு மணி நேரம் முளைக்கட்ட
விடவும்.
தண்ணீரை வடிகட்டி மீண்டும் பன்னிரெண்டு மணி நேரம் முளைக்கட்ட
விடவும்.
பிறகு நன்றாக முளைக்கட்டிய மூன்று பயறுகளையும் எடுத்து , உப்பு,
சோம்பு , சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவுடன் பச்சரிசி மாவு, மசித்த உருளைக்கிழங்கு ,
முருங்கைக்கீரை , வெங்காயம் , பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் ,
தேங்காய் துருவல் ஆகியவற்றை கலந்து அடை மாவு பதத்துக்கு
கரைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து காய்ந்ததும் மாவை ஊற்றி எண்ணை
விட்டு , இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்
சூடான அடை மேல் வெண்ணெய் போட்டும் சாப்பிடலாம்.
ஊட்டசத்து மிக்க உணவான இது உடலுக்கு பலத்தையும்,
ஆரோக்யத்தையும் கொடுக்க கூடியது . எளிதில் ஜீரணமாவதால்
வயதானவர்களும் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment