சத்துமாவு சப்பாத்தி :
தேவையான பொருட்கள் :
1. கோதுமை - 2 கிலோ
2. சோளம் - 1/4 கிலோ
3. கேழ்வரகு - 1/4 கிலோ
4. கறுப்பு உளுந்து - 1/4 கிலோ
5. உப்பு - தேவையான அளவு
6. நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
கோதுமையையும் , மற்ற தானிய வகைகளையும் ஒன்றாகக் கலந்து
வெயிலில் உலர்த்துங்கள். பிறகு அவற்றை மிஷினில் கொடுத்து
மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.
தேவையானபோது , இந்த மாவிலிருந்து ஒரு கப் அளவு எடுத்து, உப்பு
சேர்த்து சப்பாத்தி மாவைப் போலப் பிசைந்து கொள்ளுங்கள் .
சிறு சிறு சப்பாத்திகளாக தேய்த்து , தோசைக்கல்லில் போட்டு
சுட்டெடுங்கள் .
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் முதல் அனைவரும் விரும்பி உண்ண ஏற்றது.
No comments:
Post a Comment