ஜிஞ்சர் சூப்
தேவையான பொருட்கள் :
1. துருவிய இஞ்சி - 1/4 கப்
2. துருவிய கேரட் , முட்டைகோஸ் ( கலந்தது ) - 1/2 கப்
3. கைக்குத்தல் அரிசி - 3 மேஜைக்கரண்டி
4. மிளகுத்தூள் - 1/ 2 மேஜைக்கரண்டி
5. சீரகத்தூள் - 1/2 மேஜைக்கரண்டி
6. வெங்காயத்தாள் - சிறிதளவு
7. எண்ணை - 1 மேஜைக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கைகுத்தல் அரிசியை மிக்ஸ்யில் போட்டு சன்னமான ரவை போல்
அரைக்கவும். வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணை விட்டு இஞ்சி, கேரட், முட்டைகோஸ் மூன்றையும்
நன்கு வதக்கவும். பிறகு குக்கரில் அதை கொட்டி அத்துடன்
கைக்குத்தல்அரிசி ரவையை போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி
குக்கரை மூடவும் . ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும் . சிறிது நேரம்
கழித்து குக்கரை திறந்தவுடன் , மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து
ஒரு கொதி வைத்து இறக்கி வெங்காயத்தாளை போட்டு இரண்டு
நிமிடம் மூடிவிடவும்.
சாபிடுவதற்கு முன் சூப் சாப்பிடுவது நல்லது. ஜிஞ்சர் சூப் நல்ல பசியை தூண்டும் ,
No comments:
Post a Comment