தூதுவளை தோசை:
தேவையான பொருட்கள்:
1. புழுங்கலரிசி - 1 கப்
2. தூதுவளை இலை - 15
3. மிளகு - 10
4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் - 2
6. உப்பு - தேவைக்கேற்ப
7. எண்ணை + பசுநெய் - தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து பின் மிக்ஸ்யிலோ அல்லது ஆட்டுகல்லிலோ பச்சை மிளகாய், மிளகு சீரகம், தூதுவளை இலை உப்பு சேர்த்து நன்றாக ஆட்டவும்.
பின்னர் தோசைக்கல்லில் இந்த மாவை மிக மெல்லிய ஊத்தப்பம் போல ஊற்றி பசுநெய் + எண்ணையைக் கலந்து அதை, சுற்றிவர ஊற்றி, திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
மார்பில் சளிக்கட்டியிருந்தால் அதை குணப்படுத்தும் தன்மை உள்ளது இந்த தோசை. ஆனால் சூடாக சாப்பிட்டால்தான் சுவை.
No comments:
Post a Comment