சுண்டைக்காய் குழம்பு
தேவையான பொருட்கள் :
1. பிஞ்சு சுண்டைக்காய் - ஒரு கைப்பிடி அளவு
2. புளி - எலுமிச்சம்பழ அளவு
3. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
4. கடுகு - 1/4 தேக்கரண்டி
5. சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
6. கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
7. கறிவேப்பிலை - சிறிதளவு
8. நல்லெண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் நல்லெண்ணெய் விட்டு , லேசாக நசுக்கிய
சுண்டைக்காயைப் போட்டு நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணை விட்டு கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு
தாளித்து அதில் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.
புளியைக் கரைத்து வடிகட்டிய புளித்தண்ணீர் , வதக்கிய
சுண்டைக்காய் , உப்பு சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும் . எண்ணை
பிரிந்து வரும் போது , கறிவேப்பிலை தூவி இறக்கவும். மிகுந்த
மணத்துடன் பார்க்கும்போதே சாப்பிட தூண்டும்.
பித்தம் , சர்க்கரை அதிகமுள்ளவர்களுக்கு சுண்டைக்காய் எளிய வரப்பிரசாதம்.
இதே போல் சுண்டைக்காய் வற்றல் குழம்பும் செய்யலாம் .
No comments:
Post a Comment