வாழைத்தண்டு சாலட்
தேவையான அளவு :
1. வாழைத்தண்டு - 1 கப் பொடியாக நறுக்கியது
2. மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
3. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
4. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
5. தென்கைத்துருவல் - 1/2 கப்
6. கேரட் துருவல் - 2 தேக்கரண்டி
7. கொத்துமல்லி - பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை - பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
செய்முறை :
பொடியாக நறுக்கிய வழைத்தண்டுடன் இரண்டு கப் தண்ணீரும்
எலுமிச்சை சாறும் சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். பின்பு
வாழைத்தண்டுத் துண்டுகளைப் பிழிந்து எடுத்து வேறொரு
பாத்திரத்தில் போடவும். இதனுடன் தேங்காய், கேரட் துருவல்களையும்
கலந்து மல்லி, கறிவேப்பிலை சேர்த்து மிளகு, சீரகத்தூளுடன் ஒரு
சுற்று நன்றாக கிளறவும் . கலவையை தட்டில் பரப்பினால் சாலட்
அவ்வளவுதான் .
வாழைத்தண்டு சாலட் கல் நீக்கியாகவும் செயல்படுகிறது. மலச்சிக்கல்,
நீரிழிவு நோய்களுக்கு சிறந்த மருந்து.
No comments:
Post a Comment