கலவைக்காய் கூட்டு
தேவையான பொருட்கள் :
1. பாகற்காய் - 6 துண்டுகள் (50 கிராம் )
2. சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 50 கிராம்
3. பரங்கிக்காய் - 50 கிராம்
4. பூசணிக்காய் - 50 கிராம்
5. மொச்சை (தோலுரித்தது) - 1 கப்
6. அவரைக்காய் - 5
7. வாழைக்காய் - 1/2 காய் (பாதி வாழைக்காய் )
8. பீன்ஸ் - 10
9. கேரட் - 1
10. பச்சை மிளகாய் - 1
11. தேங்காய்த்துருவல் - 1 கப்
12. சீரகம் - 1 தேக்கரண்டி
13. கடுகு - 1/2 தேக்கரண்டி
14. கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
15. தனியா - 1 மேஜைக்கரண்டி
16. எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
17. உப்பு - தேவையான அளவு
18. கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை:
எல்லா காய்களையும் நன்றாக கழுவி சுத்தம் செய்து , சம அளவாக
நறுக்கிக்கொள்ளவும் . பிறகு சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும் .
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பச்சை மிளகாய் , தனியா ,
கடலைப்பருப்பு , தேங்காய்த்துருவல் ஆகியவற்றை வறுத்து ஆற
வைத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸ்யில் அரைக்கவும் .
வேக வைத்துள்ள காய்கறிகளுடன் அரைத்ததை விட்டு , சிறிது நேரம்
கொதித்தவுடன் , ... கடுகு, கறிவேப்பிலையை தாளித்து அதில்
சேர்க்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் இறக்கிப்
பரிமாறவும்.
உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது.
நார்ச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால் வயிற்றுக்கு இதமாக
இருப்பதுடன் எளிதில் ஜீரணமாகும் தன்மையுடையது .